சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதாவது மார்ச் 27ஆம் தேதி  காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.  அதேபோல் ஆன்லைனிலும் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆன்லைன் டிக்கெட் விற்பனையானது, டிக்கெட் விற்பனை தொடங்கிய அரைமணி நேரத்தில் முடிவடைந்துள்ளது. 


ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.  மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தல தோனி களமிறங்குகிறார் என்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நள்ளிரவு முதல் ரசிகர்கள் வரிசையில் காத்து இருந்து டிக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர். 


கட்டண விபரம்


கேலரி C/D/E Lower - நேரடி விற்பனை - ரூபாய் 1,500.


கேலரி  D/E Upper  - ஆன்லைன் விற்பனை -  ரூபாய் 3,000.


கேலரி  I/J/K Lower - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,500. 


கேலரி  I/J/K Upper  - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,000. 




ஏப்ரல் 3 - எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 07:30 மணி 


ஏப்ரல் 12 - எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 07:30 மணி 


ஏப்ரல் 21 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிராக, இரவு 07:30 மணி 


ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் எதிராக, மதியம் 03:30 மணி 


மே 6 - மும்பை இந்தியன்ஸ் எதிராக, பிற்பகல் 03:30 மணி 


மே 10 - எதிராக டெல்லி கேபிடல்ஸ், இரவு 07:30 மணி 


மே 14 - எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 07:30 மணி 


CSK அணி 2023 வீரர்கள்


எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி சிங் , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.