AUS vs BAN Score LIVE: 5வது விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. 21 ரன்களில் வெளியேறிய முஷ்பிகுர் ரஹிம்..!
AUS vs BAN Score Live Updates: 2023 உலகக் கோப்பையின் 43வது ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இடையேயான போட்டி தொடர்பான நேரடி அறிவிப்புகளை இங்கே படிக்கவும்.
307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணிக்கு வங்கதேச அணி 307 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.
வங்கதேச அணி 42.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
250 ரன்களை நோக்கி வங்கதேசம் அணி நகர்ந்து வருகிறது. தற்போது வங்கதேச அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மஹமுதுல்லா 24 ரன்களுடனும், தௌஹித் 43 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
மிட்செல் மார்ஷ் வீசிய 32 ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் மஹமுதுல்லா.
வங்கதேசத்தின் மூன்றாவது விக்கெட்டான நஸ்முல் ஹுசைன் 57 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தௌஹித் 36 ரன்கள் எடுத்து விளையாடி வரும் நிலையில் இலங்கை அணி 27.5 ஓவரில் 170 ரன்களை எடுத்துள்ளது.
45 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ், ஜாம்பா வீசிய பந்தில் லாபுசானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி 15.1 ஓவர்களில் ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
அபோட் பந்துவீச்சில் வங்கதேச அணியின் தொடக்க வீரர் தஞ்சீத் ஹசன் 34 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் மற்றும் நஸ்முல் பேட்டிங் செய்கிறார்கள். வங்கதேச அணி தற்போது 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் 5 ஓவரில் 20 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ் 17 பந்துகளில் 8 ரன்களுடனும், தஞ்சீத் ஹசன் 13 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு மெய்டன் ஓவரை வீசியுள்ளார்.
வங்கதேசம் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. லிட்டன் தாஸ் 2 பந்துகளில் 1 ரன் எடுத்து விளையாடி வருகிறார். தஞ்சீத் ஹசன் 10 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை தேடி வருகின்றனர்.
தன்சீத் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தௌஹீத் ஹிரிடோய், மெஹ்தி ஹசன் மிராஜ், மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தபிஜுர் ரஹ்மான்.
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வங்கதேச வீரர்கள் களம் இறங்குவார்கள்.
Background
2023 உலகக் கோப்பையின் 43வது ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெறும். இந்தப் போட்டி புனேயில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி வெளியேற்றப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் கடைசி ஆட்டம் இதுவாகும். எனவே, அணி இதில் வெற்றி பெற்று தங்கள் நாட்டுக்கு திரும்ப விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுடன் போட்டி போடுவது அவருக்கு எளிதாக இருக்காது. ஆஸ்திரேலியா அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான கணிக்கப்பட்ட ப்ளேயிங் 11:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்/சீன் அபோட்.
வங்கதேசம்: தஞ்சீத் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தௌஹீத் ஹிரிடோய், மஹேதி ஹசன், மெஹ்தி ஹசன் மிராஜ், தஞ்சீம் ஹசன் ஷாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -