Asia Cup 2023, IND Vs BAN Live: இந்தியாவை வெற்றி பெற வைப்பார்களா அக்ஷர் - ஷர்துல்..?
IND Vs BAN Live: ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.
வங்கதேச அணியின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றிக்கு 26 பந்துகளில் 40 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிராக தனி ஆளாக போராடி வரும் சுப்மன்கில் சதம் விளாசினார்.
வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. ஜடேஜா 7 ரன்னில் போல்டானார்.
வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. ஜடேஜா 7 ரன்னில் போல்டானார்.
இந்திய அணியினர் வங்கதேச பந்துவீச்சில் தடுமாறி வருகின்றனர். 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 139 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தாலும், தொடக்க வீரர் சுப்மன்கில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார்.
சுப்மன்கில் - கே.எல்.ராகுல் ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 50 ரன்களை கடந்துள்ளது.
சுப்மன்கில் - கே.எல்.ராகுல் ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 50 ரன்களை கடந்துள்ளது.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில், தன்ஷிம் பந்தில் போல்டானார்.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில், தன்ஷிம் பந்தில் போல்டானார்.
265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய கேப்டன் ரோகித்சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இந்திய அணிக்காக எதிராக சிறப்பாக ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்துள்ளது. இதனால், இந்திய அணி 266 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்காக அபாரமாக ஆடிய நசும் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவுட்டானார்.
கடைசி 5 ஓவர்கள் என்பதால் நசும் - மெகிதி ஹாசன் அதிரடியாக ஆடி வருகின்றனர்.
கடைசி 5 ஓவர்கள் என்பதால் நசும் - மெகிதி ஹாசன் அதிரடியாக ஆடி வருகின்றனர்.
ஷகிப், தௌகித்தின் அபாரமான ஆட்டத்தால் வங்கதேச அணி 200 ரன்களை கடந்தது.
இந்திய அணிக்கு எதிராக அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய தௌகித் ஷமி பந்தில் அவுட்டானார்.
இந்திய அணிக்கு எதிராக அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய தௌகித் ஷமி பந்தில் அவுட்டானார்.
அபாரமாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்திருந்தபோது போல்டானார்.
வங்கதேச அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ஷகிப் அல் ஹசன் அபாரமாக ஆடி அரைசதம் கடந்துள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து வங்கதேச அணி 100 ரன்களை கடந்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 37 ரன்களுடனும், தௌகித் 25 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை எடுத்துள்ளது.
வங்கதேச அணிக்காக ஷகிப் அல் ஹசனுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த மிராஸ் அக்ஷர் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக நிதானமாக ஷகிப் அல் ஹசன் - மிராஸ் ஜோடி ஆடி வருகின்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக நிதானமாக ஷகிப் அல் ஹசன் - மிராஸ் ஜோடி ஆடி வருகின்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக நிதானமாக ஷகிப் அல் ஹசன் - மிராஸ் ஜோடி ஆடி வருகின்றனர்.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சைத் தொடர்ந்து அனமுல் ஹக் 4 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடக்க வீரர் தன்ஷித் ஹாசன் ஷர்துல் தாக்கூர் பந்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போல்டானார்.
தொடக்க வீரர் தன்ஷித் ஹாசன் ஷர்துல் தாக்கூர் பந்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போல்டானார்.
தொடக்க வீரர் தன்ஷித் ஹாசன் ஷர்துல் தாக்கூர் பந்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போல்டானார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் முகமது ஷமி பந்தில் போல்டானார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் முகமது ஷமி பந்தில் போல்டானார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் முகமது ஷமி பந்தில் போல்டானார்.
இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக திலக் வர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.
Background
ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றிருந்தது. இதில் லீக் போட்டிகள் முடிவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், மீதமிருந்த 4 அணிகள் குரூப் 4 சுற்றுக்கு முன்னேறியது.
இதில் குரூப் 4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்ற நிலையில், இப்போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே அமையும். முன்னதாக குரூப் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்த வங்கதேசம் அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு?
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா தொடங்கி ஹர்திக் பாண்ட்யா வரை வலுவான ஒன்றாக திகழ்கிறது. முந்தைய ஆட்டத்தில் இலங்கை அணியை தனது சுழற்பந்து வீச்சால் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் துவம்சம் செய்தனர். இதில் ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒருநாள் போட்டியில் 200வது விக்கெட்டை எடுத்த 7வது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சேர்க்கப்படலாம். அதேபோல் அக்ஷர் படேலின் பார்ம் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளதால் அவர் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சம்பிரதாய ஆட்டம் என்பதால் முன்னணி வீரர்கள் சிலர் இப்போட்டியில் விளையாட மாட்டர்கள் என கூறப்படுகிறது.
அதேசமயம் வங்கதேச அணியை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவர் நாடு திரும்பியுள்ளார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவர் கழற்றி விடப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் 31 போட்டியில் இந்தியாவும் 7போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை தழுவியதில்லை என்பதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அந்த பெருமையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் பிரேமதேசா மைதானத்தில் நடைபெற உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -