மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மத்திய சட்டத்துரை அமைச்சர் மேக்வால் அர்ஜுன்ராம் தாக்கல் செய்தார். 


ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா:


நாடே மிகவும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதவானது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழி வகை செய்யும். மக்களவையின் இன்றைய பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தாக்கல் செய்வதும் இடம்பெற்றிருந்தது. அரசியலமைப்பு (129 திருத்தம்) மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.


எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:


இரண்டு மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.


“ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற நோக்கத்தில் இந்த மசோதாக்களை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது. அதற்கு சட்டமியற்றும் தகுதி இல்லை. மாநிலங்களவையின் பதவிக்காலத்தை மக்களவையின் காலத்திற்கு உட்பட்டதாக மாற்ற முடியாது . அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மனதில் வைத்து, இந்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி கூறினார்.


இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு ஷார்ட்கட்.. எக்ஸ்க்ளூசிவ் இரண்டு சாலைகள்.. பரந்தூரில் அடுத்து என்ன ?


அசம்கர் பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி., கூறியதாவது: 8 மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத அரசு, தேர்தல் தோல்வி பயத்தால், அனைத்து மாநிலங்களிலும், லோக்சபாவிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துகிறது. இதை திரும்பப் பெற வேண்டும்.


'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது தேர்தல் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு மனிதனின் ஆசை நிறைவேறியது என பிரதமர் நரேந்திர மோடியை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி சாடினார்.


"தேர்தல் ஆணையர்கள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் கொள்கைகளை ஏற்காத முடிவுகளை எடுத்ததை நாங்கள் பார்த்தோம்... 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்" என சிவசேனா (யுபிடி) ) எம்பி அனில் தேசாய் தெரிவித்தார்.


இந்த மசோதா சொல்ல வருவது என்ன?


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசின்  உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அமைச்சரவை  ஏற்றுக்கொண்டது. அந்த பரிந்துரைகளின்படி  இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த குழு பரிந்துரைத்தது. முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கவும், பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்களை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்தவும் இந்த குழுவினர் பரிந்துரைத்தனர். மேலும் அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.  .