உலககோப்பை டி20 தொடர் நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தயாராகிவிட்ட இந்திய அணி இன்று தனது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வழக்கமாக பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் விராட்கோலி இன்று பீல்டிங்கில் அசத்தினார். அதாவது, கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது, பாட் கம்மின்ஸ் சிக்ஸருக்கு விளாசிய பந்தை பவுண்டரி லைனில் இருந்த விராட்கோலி பறந்து ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அனைவரையும் அசத்தினார். மேலும், இந்த போட்டியில் டிம் டேவிட்டை டைரக்ட் த்ரோவில் ரன் அவுட் செய்ததும் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.






சமூக வலைதளங்களில் விராட்கோலியின் கேட்ச் வைரலாகி வரும் சூழலில், விராட்கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விராட்கோலியின் ஒற்றை கை கேட்ச் புகைப்படத்தை பதிவிட்டு, அழகு என்று பதிவிட்டுள்ளார்.




அவரது புகைப்படத்திற்கு கீழே பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு கடைசி ஓவரை துல்லியமாக வீசிய முகமது ஷமியும், விராட்கோலியின் ஒற்றை கை கேட்சுமே பிரதான காரணமாக அமைந்தது.  கடைசி ஓவர் மட்டுமே வீசிய முகமது ஷமி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இந்த போட்டியில் விராட்கோலி 13 ரன்களில் 1 பவுண்டரி 1 சிக்ஸர் என 19 ரன்கள் விளாசியுள்ளார். சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் ரோகித் சர்மாவும் 33 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் விளாசினார்.


மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: என்னா எறி.. இதுதான் என்னோட வெறி.. பீல்டிங்லையும் கிங் என நிரூபித்த கோலி.. வைரல் வீடியோ!


மேலும் படிக்க : T20 World Cup 2022: இவர்கள் இருந்தாலே போதும், இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்.. அணியில் யார் ? யார் ? கணித்த ஐசிசி!