உலககோப்பை டி20 தொடர் நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கிய நிலையில், ஒரு புறம் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டிகளும், மறுபுறம் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கான பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இந்த போட்டியில் 161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். பாகிஸ்தான் அணிக்காக 2வது ஓவரை இளம் வீரர் நசீம்ஷா வீசினார்.


அவரது பந்தில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 1 ரன்னில் போல்டானார். நசீம்ஷாவின் பந்தை விலகி நின்று விளாச நினைத்த பிலிப் சால்ட்டின் பேட் பந்தில் படும் முன்பே, பந்து வலது ஸ்டம்பை தாக்கியது. நசீம்ஷா வீசிய வேகத்தில் பந்து சில அடி தூரம் பறந்து சென்றது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






சோயிப் அக்தர், வாசிம் அக்ரம், ஜாகீர்கான், பிரட்லீ போன்ற அசகாய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசியபோது இதுபோன்று ஸ்டம்புகள் அடிக்கடி பறக்கும். ஆனால், சமீபகாலமாக ஸ்டம்புகளை பறக்க விடும் அளவிற்கு அடிக்கடி பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை போல்டாக்குவதில்லை. இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு ஸ்டம்புகள் பறக்க விட்ட நசீம்ஷாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்காக கேப்டனாக ஷதாப்கான் களமிறங்கினார். மசூத் 39 ரன்களும், இப்திகார் அகமது 22 ரன்களும், முகமது வாசிம் ஜூனியர் 26 ரன்களும் விளாசினர். இதனால், பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்காக ஹாரி ப்ரூக் 45, சாம்கரண் 33 ரன்களும் விளாசியதால் இங்கிலாந்து அணி 14.4 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது.  


மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: ஹர்திக் பாண்ட்யா அவுட்டானதை கொண்டாடினாரா சூர்யகுமார் யாதவ்..? வைரலாகும் வீடியோ..!


மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: என்னா எறி.. இதுதான் என்னோட வெறி.. பீல்டிங்லையும் கிங் என நிரூபித்த கோலி.. வைரல் வீடியோ!