சாம்பியன்ஸ் லீக் டி 20:


சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அந்த வகையில் இந்த போட்டிகள் இந்தியாவில் நான்கு முறையும் தென்னாப்பிரிக்காவில்  இரண்டு முறையும் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) தலா இரண்டு முறையும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.


2014 ஆம் ஆண்டுக்குப் பின் நிறுத்தம்:


 முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  விறுவிறுப்பாக நடைபெற்ற, இந்த சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறவில்லை.


அதேபோல், சாம்பியன்ஸ் லீக் டி20 யின் ஆறாவது சீசனில் இந்தியாவிலிருந்து மூன்று அணிகள், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தலா இரண்டு மற்றும் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்தில் இருந்து தலா ஒரு அணிகள் பங்கேற்றன.


முக்கிய பேச்சு வார்த்தை:


இந்நிலையில் தான் சாம்பியன்ஸ் லீக் டி20யை மீண்டும் தொடங்குவது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லியுடன் பிசிசிஐ அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா பேசிவருவதாக  Cricket Victoria தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசியுள்ள அவர், “கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியுடன் நான் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் டி20க்காக பேசி வருகிறேன். ஏனென்றால் அதை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ECB மற்றும் BCCI இடையே சாம்பியன்ஸ் லீக் பற்றி உரையாடி வருவதை நான் நன்கு அறிவேன்” என்று பேசியுள்ளார்.


 


மேலும் படிக்க: Ben Stokes: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன பென் ஸ்டோக்ஸ் - என்ன?


 


மேலும் படிக்க: Hardik Pandya: ”கெட்டப்பய சார் இந்த காளி” சூப்பர் ஸ்டார் பாணியில் போஸ்ட் போட்ட ஹர்திக் பாண்டியா!