பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:


கடந்த வரும் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. அதன்படி அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


அந்த வகையில் ஒரு நாள் உலகக் கோப்பை முடிந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.


நான் செய்த தியாகம்:


இதுதொடர்பாக பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “நான் கடினமாக உழைத்து வருகிறேன், மேலும் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் ஆல்-ரவுண்டராக முழுப் பங்கை ஆற்றுவதற்காக எனது பந்துவீச்சு உடற்தகுதியை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பையில் இருந்து விலகுவது, எதிர்காலத்தில் நான் ஆல்ரவுண்டராக இருக்க விரும்பும் ஒரு தியாகமாக இருக்கும். சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், எனது முழங்கால் அறுவை சிகிச்சை மற்றும் ஒன்பது மாதங்கள் பந்துவீசாமல் இருந்த பிறகு பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.” என்றார்.


அனைவருக்கும் வாழ்த்துக்கள்:






மேலும், “எங்கள் டெஸ்ட் கோடைக்காலம் தொடங்கும் முன் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமுக்காக (Durham) விளையாட காத்திருக்கிறேன். ஜோஸ் பட்லர், மேத்யூ மோட் மற்றும் எங்கள் சாம்பியன் பட்டத்தை பாதுகாக்க எங்கள் அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.


முன்னதாக, சமீபத்தில் நடந்துமுடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாகதான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.


அதேபோல், கடந்த முறை இங்கிலாந்து அணி டி20 கோப்பையை வெல்ல ஸ்டோக்ஸின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததது. அந்த வகையில் கடந்த  2022ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.


பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 49 பந்துகளில் 52* ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இச்சூழலில் தான் நடப்பு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிடை ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல். போட்டிகள் திடீர் தேதி மாற்றம்! எந்த மேட்ச் எப்போது நடைபெறும்?


மேலும் படிக்க: Ishan Kishan: ”சேட்டை புடுச்ச பையன் சார்” சூப்பர் மேன் லுக்கில் கலக்கிய இஷான் கிஷன்! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!