காமன்வெல்த் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ பி.வி.சிந்து சாம்பியன்களின் சாம்பியன். அவருடைய மேன்மையை அவர் மீண்டும், மீண்டும் நிரூபிக்கிறாள். அவருடைய அர்ப்பணிப்பும், உடன்பாடும் பிரமிக்க வைக்கிறது. காமன்வெல்த்தில் தங்கம் வென்றதற்கு வாழ்து்துக்கள். எதிர்காலத்தில் சிறப்பாக ஆட வாழ்த்துக்கள்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பி.வி.சிந்து பேட்மிண்டனில் அறிமுகமாகியது முதல் இந்தியாவிற்காக தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலத்தை வென்று அசத்தியுள்ள பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஆசிய போட்டிகள், காமன்வெல்த் என விளையாடிய அனைத்து தொடர்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு பெருமை மேல் பெருமை சேர்த்து வருகிறார்.
பி.வி.சிந்துவிற்கு பிரதமர் மோடி மட்டுமின்றி நாட்டின் மற்ற தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது டுவிட்டர் பக்கத்தில் பேட்மிண்டனில் தங்கம் வென்று வரலாறு படைத்து பர்மிங்காமில் நமது தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ததற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Lakshya Sen Wins Gold: காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டனில் தங்கம் வென்று வரலாறு படைத்த லக்ஷ்யா சென்
மேலும் படிக்க : IND vs AUS CWC Final: ஹாக்கியில் வரலாறு படைக்குமா இந்தியா..? ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கம் வெல்லுமா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்