காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். அதன்பின்னர் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென் மலேசிய வீரர் யாங்கை எதிர்த்து விளையாடினார்.  நடப்பு ஆண்டில் லக்‌ஷ்யா சென் சிறப்பான ஃபார்மில் இருந்தார். இதன்காரணமாக இன்றைய போட்டியில் இவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. 


 


இந்நிலையில் இந்தப் போடியில் முதல் கேமில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் மலேசிய வீரர் யங் 21-19 என்ற கணக்கில் கேமை வென்றாஅர். அதபின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமை லக்‌ஷ்யா சென்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த கேமை 21-9 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் இரு வீரர்களும் தலா ஒரு கேமை வென்று சமமாக இருந்தனர்.


 






போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. இந்த கேமில் லக்‌ஷ்யா சென் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கேமை 21-16 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 19-21,21-9,21-16 என்ற கணக்கில் போட்டியை வென்றார். மேலும் காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பத்தையும் லக்‌ஷ்யா சென் பெற்று தந்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு இது 20வது தங்கப்பதக்கம். இதன்மூலம் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மிச்சல் லீயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15,21-13 என்ற கணக்கில் எளிதாக வென்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். 


ஏற்கெனவே பேட்மிண்டன் ஆடவர் குழு பிரிவில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. அதில் இந்திய அணி சிங்கப்பூர் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அத்துடன் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது தனி நபர் பிரிவில் இந்திய அணி இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண