ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது பாரத்பூர் மக்களவை தொகுதி. இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சிதாகோலி. இவர் டெல்லியில் இருந்து ராஜஸ்தானில் உள்ள தனது தொகுதிக்கு காரில் நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.


அப்போது, அவர் வந்த வழியில் சுமார் 150க்கும் மேற்பட்ட லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தன. தொடர்ச்சியாக இத்தனை லாரிகள் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எம்.பி.ரஞ்சிதா கோலி உடனடியாக காரை துரத்திச் சென்று நிறுத்த முயற்சித்துள்ளார்.










அவரது முயற்சியால் இரண்டு, மூன்று டிரக்குகளையும் தடுத்து நிறுத்தியுள்ளார். மற்ற டிரக்குகள் தப்பிச் சென்றுள்ளது. அப்போது, தப்பிச்சென்ற லாரிகளில் இருந்த சிலர் எம்.பி.ரஞ்சிதா கோலியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.




இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா கோலி தன்னுடைய ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் அதிகளவு பாரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அந்த லாரிகளில் இருந்தவர்கள் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டினார்.






மக்களவை உறுப்பினர் தன்னை கொலை செய்ய மாஃபியா கும்பல் முயற்சித்ததாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்ட் ஆர்.எஸ்.காவியா விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண