வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர விழாவுக்கு தேசியக் கொடிகள் வாங்க பள்ளி மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் பணம் வசூலித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் முன்னதாக தன் பள்ளி மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக முன்னதாக புகார் எழுந்தது.


இது குறித்த வீடியோ ஒன்று முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பிரஜேஷ் குமார் எனும் இத்தலைமை ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பள்ளி மாணவர்களை 15 ரூபாய் கொண்டு வருமாறு தலைமை ஆசிரியர் கேட்கும் வகையில் அமைந்துள்ள வீடியோ, முன்னதாக ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான நிலையில், மாநில அரசு மற்றும் முதல்வர் பிறப்பித்த உத்தரவின்படி பணம் கேட்கப்படுவதாக மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் வீடியோவில் தெரிவிள்ளார்.


மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம் பணம் வசூலித்ததற்காகவும், பள்ளிக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததாலும் தலைமை ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் முன்னதாக உத்தரப் பிரதேசத்திலேயே பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளுக்கு தரும் மதிய உணவு திட்டத்தில் 11.4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் மதிய உணவு திட்டத்தில் ரூபாய் 11.4 கோடி மோசடி செய்த பள்ளி முதல்வர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத் என்ற பகுதியில் வசிக்கும் சந்திரகாந்த் சர்மா என்னும் பள்ளி தலைமை ஆசிரியர், தனது உறவினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இணைந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தியதும், இந்த மோசடிக்கு அந்த நிறுவனத்தை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சர்மா நடத்தி வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் போலியான விலைப்பட்டியல் மற்றும் பில்களை சமர்ப்பித்து பணத்தை மோசடி செய்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண