கேரள மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 


 


கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது.


டி20 போட்டிகள்:


இந்நிலையில், தான் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி 20 அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில், நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும், உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இச்சூழலில், தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டு வருகிறது. இதில், இன்று (நவம்பர் 23) நடைபெறும் முதல் டி20 போட்டியில் விசாகப்பட்டினத்தில் விளையாடி வருகிறது இந்திய அணி.


அதிரடி சதம் விளாசிய ஜோஸ் இங்கிலிஸ்:


முன்னதாக, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேட் ஷார்ட் ஆகியோர் களமிறங்கினார்கள். அதில், 11 பந்துகள் களத்தில் நின்ற மேட் ஷார்ட் 3 பவுண்டரிகள் எடுத்தார். பின்னர் 13 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் பந்தில் விக்கெட் ஆகி நடையைக்கட்டினார்.


அடுத்ததாக ஜோஸ் இங்கிலிஸ் களம் இறங்கினார். இவர் ஸ்டீவ் ஸ்மித் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. அப்போது, பிரசித் கிருஷ்ணா பந்தில் ரன் அவுட் ஆனார் ஸ்டீவ் ஸ்மித். அதன்படி, மொத்தம் 41 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 52 ரன்கள் எடுத்தார்.


 


இதனிடையே, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் ஜோஸ் இங்கிலிஸ். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரிகளும் பறக்க விட்டார். 47 வது பந்திலேயே சதம அடித்த அவர், மொத்தம் 50 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என மொத்தம் 110 ரன்களை குவித்து அசத்தினார். இவ்வாறாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. தற்போது இந்திய அணி அந்த இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: Rohit - Virat Kohli: ”அடுத்த டி20 உலகக்கோப்பையிலும் ரோகித், விராட் கோலி ஆட வேண்டும்” - கெளதம் கம்பீர் ஆசை


 


மேலும் படிக்க: KL Rahul: உலகக் கோப்பை தோல்வி; "இன்னும் வலிக்கிறது...” - இதயம் நொறுங்கிய கே.எல்.ராகுல்!