Anna Serial: நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சமாதானம் செய்து பரணிக்கு சீர் கொடுக்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அண்ணா சீரியல்:


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சமாதானம் செய்து பரணிக்கு சீர் கொடுக்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, கனி அண்ணா நீ ஜெயிச்சிட்ட சீர் எடுத்துட்டு வராங்க என்று ஓடி வர பரணி அதிர்ச்சி அடைகிறாள், இருந்தாலும் ஷண்முகம் அவளை வாங்க பொண்டாட்டி என கூப்பிட்டு வெறுப்பேற்றி விட்டு வெளியே அழைத்து வந்து பாக்கியம் மற்றும் சௌந்தரபாண்டியை வரவேற்கிறான். ஆனால் சௌந்தரபாண்டி பிச்சைக்காரனை வீடு தேடி வந்து பிச்சை போட வேண்டி இருக்கு என அவமானப்படுத்துவது போல் பேச ஷண்முகம் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறான். 


இன்று நடக்கப்போவது என்ன?


சௌந்தரபாண்டி வந்த விஷயம் அறிந்த வைகுண்டம் அவனை இன்னைக்கு கொல்லாமல் விட மாட்டேன் என கிளம்ப ஷண்முகம் அவரை தனியாக அழைத்து சென்று அம்மா சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தி ரூமுக்குள் தான் இருக்க வேண்டும் என சொல்லி வெளியே வருகிறான்.


அதன் பிறகு பாக்கியமும் சௌந்தரபாண்டியும் சீர் கொடுக்க ஷண்முகம் பரணி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு புது துணியை மாற்றி கொண்டு வெளியே வருகின்றனர், முத்துப்பாண்டி ஷண்முகத்திற்கு மோதிரம் போடும் சாக்கில் அவன் விரலை உடைக்க முயற்சிக்க ஷண்முகம் முத்துபாண்டியின் காலை மிதித்து அவனிடம் இருந்து தப்பிக்கிறான், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.




மேலும் படிக்க


Sandhiya Ragam: உதவி கேட்டு போன மாயா! புவனேஷ்வரி போட்ட சதி திட்டம்! சந்தியா ராகம் சீரியலில் இன்று!


Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய வெற்றி.. கோவிலில் நடந்தது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!