Asian Games 2023: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் வெள்ளியும், குல்வீர் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். 

வெள்ளி பதக்கம் வென்ற கார்த்திக் குமார் 10 ஆயிரம் மீட்டர் இலக்கினை 28.15.38  நிமிடங்களிலும்  வெண்கலம் வென்ற குல்வீர் சிங் 10 ஆயிரம் மீட்டர் இலக்கினை 28.17.21 நிமிடத்திலும் அடுத்தடுத்து எட்டி இந்தியாவுக்கு பதக்கங்களை உறுதி செய்தனர். 

இதன் மூலம் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 10 தங்கமும், 14 வெள்ளியும் 14 வெண்கலமும் வென்றுள்ளது. 

நாடு

தங்கம்

வெள்ளி

வெண்கலம்

பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை
சீனா (CHN) 105 63 32 200
ஜப்பான் (JPN) 27 35 37 99
கொரியா குடியரசு (KOR) 26 28 48 102
இந்தியா (IND) 10 14 14 38
தாய்லாந்து (THA) 1 3 9 20
உஸ்பெகிஸ்தான் (UZB) 7 10 15 32
ஹாங்காங், சீனா (HKG) 5 13 18 36
சீன தைபே (TPE) 5 6 9 20
ஐஆர் ஈரான் (ஐஆர்ஐ) 3 10 10 23
DPR கொரியா (PRK) 3 6 4 13
கஜகஸ்தான் (KAZ) 3 4 19 26
இந்தோனேசியா (INA) 3 3 10 16
சிங்கப்பூர் (SGP) 2 4 4 10
மலேசியா (MAS) 2 3 8 13
வியட்நாம் (VIE) 1 2 12 15
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 1 1 4 6
மக்காவ், சீனா (MAC) 1 1 2 4
கத்தார் (QAT) 1 1 2 4
குவைத் (KUW) 1 1 1 3
தஜிகிஸ்தான் (TJK) 1 1 1 3
கிர்கிஸ்தான் (KGZ) 1 0 2 3
பஹ்ரைன் 1 0 0 1
மங்கோலியா (எம்ஜிஎல்) 0 2 5 7
ஜோர்டான் (JOR) 0 2 1 3
பிலிப்பைன்ஸ் (PHI) 0 1 6 7
புருனே தருஸ்ஸலாம் (BRU) 0 1 0 1
ஓமன் (OMA) 0 1 0 1
இலங்கை (SRI) 0 1 0 1
ஆப்கானிஸ்தான் (AFG) 0 0 3 3
லாவோ PDR (LAO) 0 0 2 2
பங்களாதேஷ் (BAN) 0 0 1 1
ஈராக் (IRQ) 0 0 1 1
லெபனான் (LBN) 0 0 1 1
பாகிஸ்தான் (PAK) 0 0 1 1
துர்க்மெனிஸ்தான் (டிகேஎம்) 0 0 1 1