Asian Games 2023: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மோதிக்கொண்டன. இதில் இந்திய அணி போட்டி தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் முதல் பாதி முடிந்ததும் இந்திய அணி 6 கோல்கள் அடித்து இருந்தது. அப்போது பாகிஸ்தான் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மூன்றாவது பாதியில் இந்தியா மேற்கொண்டு ஒரு கோலும், பாகிஸ்தான் இரண்டு கோல்களும் அடித்தது. இறுதியில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 8 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 8 கோல்கள் என்ற வெற்றி வித்தியாசம் என்பது இதுவரை இந்தியா பாகிஸ்தான் ஹாக்கி வரலாற்றில் இதுவே முதல் முறை. 


இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் மட்டும் நான்கு கோல்கள் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் 11வது நிமிடத்திலும், இரண்டாவது பாதியில் 17வது நிமிடத்திலும், மூன்றாவது பாதியில் 33 மற்றும் 34வது நிமிடங்களில் அடுத்தடுத்தும் கோல்கள் அடித்து அசத்தினார்.