ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடக்கிறது. இதன் தொடக்க விழா வரும் 23-ந் தேதி நடைபெற இருந்தாலும், பல போட்டிகளுக்கான தொடக்க போட்டி இன்று தொடங்கியது.


இந்தோனேஷியா - மங்கோலியா:


இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடரில் மகளிர் டி20 போட்டியில் இந்தோனேசியா – மங்கோலியா மோதின. தரவரிசைப்பட்டியலில் நல்ல இடத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தோனேசியா, மங்கோலியா, மலேசியா, ஹாங்காங் அணிகள் தகுதிச்சுற்றில் ஆடுகின்றன.


இந்த நிலையில், இன்று ஹாங்ஸ்ஹாவ் நகரில் நடைபெற்ற போட்டியில் மலேசியா – இந்தோனேசியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்ட்தை தொடங்கிய இந்தோனேசியா அணியின் தொடக்க வீராங்கனைகள் நி புடு – நி லு தேவி ஜோடி அபாரமாக ஆடியது. இருவரும பவுண்டரிகளாக விளாச ஸகோர் நன்றாக எகிறயது.


188 ரன்கள் டார்கெட்:


10.4 ஓவர்களில் 106 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 31 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நி புடு ஆட்டமிழந்தார். ஆனாலும், மறுமுனையில் தேவி அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். அடுத்து வந்த மரியா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய தேவி நமுன்சுல் பந்தில் போல்டானார். அவர் 48 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 62 ரன்களில் அவுட்டானார்.


பின்னர், மங்கோலியா பந்துவீச்சில் கட்டுப்படுத்தினர். அடுத்து வந்த ஆண்ட்ரியானி டக் அவுட்டாக கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தோனேசியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா அணி மிக மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.


15 ரன்களுக்கு ஆல் அவுட்:


தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பாட்அமகலான் – இச்சிங்கோர்லு ஜோடி மிக நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினர். ஆனாலும், 19 பந்துகளில் 5 ரன்களை எடுத்த பத்ஜ்ரகல் ரன் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே இச்சிங்கோர்லோ டக் அவுட்டானார். அதன்பின்பு, விக்கெட்டுகள் தொடர்ந்து விழத் தொடங்கியது. காலியுனா டக் அவுட்டாக, கேப்டன் அரியுன்ட்செட்செக் நிதானமாக ஆட முயற்சித்தாலும் டக் அவுட்டானார்.


பந்துவீச்சில் இந்தோனேஷியா அணி மிரட்டியதால் மங்கோலியா பேட்டிங் சீட்டுக்கட்டு போல சரிந்தது. கடைசியில் 10 ஓவர்கள் ஆடிய மங்கோலியா அணி வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் 7 வீராங்கனைகள் டக் அவுட்டானார்கள். அதிகபட்சமாக பத்ஜர்கல் 5 ரன்கள் அடித்தார்.


இந்தோனேசியா அணியில் ஆண்ட்ரியானி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக மாலத்தீவு அணி 6 ரன்னிலும், ருவாண்டா அணிக்கு எதிராக மாலி அணி 6 ரன்னில் எடுத்ததுமே டி20 போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர் ஆகும்.


மேலும் படிக்க: Anshu Malik Viral Video: ’நாளை உங்க வீட்டு பெண்ணுக்கு இது நடக்கலாம்’... ஆபாசமான போலி வீடியோவிற்கு அன்ஷூ மாலிக் விளக்கம்!


மேலும் படிக்க: Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள்.. என்னென்ன தேதியில் என்னென்ன விளையாட்டு..? முழு விவரம் உள்ளே..!