கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி – மங்கல்வார பிரதோஷமான செவ்வாய்கிழமை பிரதோஷத்தினையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி அருள் பெற்றனர்.


 




 


தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மிகவும் விஷேசம் வாய்ந்தவையாகவும், மிகுந்த தொன்மை மற்றும் வரலாறு மிக்க கரூர் அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் தேய்பிறை பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அன்று மங்கள்வார பிரதோஷமான விஷேச பிரதோஷ நிகழ்ச்சியில், பசுபதீஸ்வரருக்கு முன்னர் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து சோடசம்ஹார நிகழ்வும், பின்னர் பல்வேறு வண்ணமலர்களாலும், பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பருமானுக்கு வெள்ளிக்கவசங்கள் சாத்தப்பட்டு, பின்னர் கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகளும் அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.


 


கரூர் சின்ன ஆண்டாங் கோவில் அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்வு.




 


கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தர மகா கும்பாபிஷே விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். அண்ணாசாலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடத்தினை தலையில் சுமந்தவாறு ஆட்டம், பாட்டத்துடன் சின்ன ஆண்டாங் கோவில் சாலை அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாலை யாகசாலை பணிகள் தொடங்க உள்ளனர்.


 




சின்ன ஆண்டாங் கோவில் சாலை எம்ஜிஆர் நகரில் தீர்த்த மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன குமார் அபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.