மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

 

டம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 


 

சித்திரை திருவிழா

 

மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2024 - கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு

 

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி வாஸ்து சாந்தி துவங்குகிறது. மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றம் 19ஆம் தேதி பட்டாபிஷேகம் 20ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் 21ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் 22 ஆம் தேதி திருத்தேரோட்டம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தேர்தல் சமயத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நாடாளுமன்றத் தேர்தல் அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை தேர்தல் என்று திருவிழா நடைபெற்றதன் காரணமாக மதுரை மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.