பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகளுக்கு சிறப்பு ரயில் - ரயில்வே அறிவிப்பு




திருவிழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6-ம் நாளான நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் வைகாசி விசாக திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு திருத்தேர் ஏற்றம் நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருத்தேரில் எழுந்தருளினர். அப்போது சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.


Coromandel Express Accident: ஒடிசாவில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 ரயில்கள்: கோர விபத்து நிகழ்ந்தது எப்படி தெரியுமா?




Odisha Train Accident: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!


அதன்பிறகு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த தேரோட்டம் பழனி கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து, நிலையை அடைந்தது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் பழனி மலை முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். பூஜைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் இன்று இரவு 8.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், ஞாயிற்று கிழமை நாளை இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண