ரயில் விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. பத்ரக்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளுடன் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.


பயங்கர விபத்து


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக மாநில, தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. 


இந்த ரயில் விபத்தில் இதுவரை இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சிறப்பு ரயில்


இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் செல்ல சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு மேலாக செண்ட்ரல் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. உறவினர்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


அதேபோன்று, ரயில் விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. பத்ரக்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளுடன் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.


முதற்கட்டமாக ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்புகின்றனர். சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்புகின்றவர்களுக்கு ரயிலிலேயே மருத்துவ உதவியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Odisha Train Accident: ஒடிசா ரயில் கோர விபத்து.. எந்தெந்த பெட்டிகள் விபத்துக்குள்ளானது..? முழு விவரம் இங்கே..!


Coromandel Express Accident: ஒடிசாவில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 ரயில்கள்: கோர விபத்து நிகழ்ந்தது எப்படி தெரியுமா?


Odisha Train Accident: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!