மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.




இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் கோகிலாம்பாள் ஆலய கொடி மரத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து மந்திரங்கள் ஓத, யாகம் வளர்க்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் மற்றும் பால் சந்தனம் உள்ளிட்ட தீர்த்தங்களால் ஆலய கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்கு பிறகு ஆலய கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 


Group 2 2A Exam: குரூப் 2 தேர்வு நேரம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு - என்ன காரணம்?




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா அடுத்த மாதம் 5 -ஆம் தேதியும் , தீர்த்தவாரி நிகழ்ச்சி 6 -ஆம் தேதியும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறவுள்ளது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


Tamil Nadu Budget 2023 : ’மார்ச் 20ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் பிடிஆர்?’ உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுகின்றன..!


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற