மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வேண்டுவோருக்கு வேண்டிய மாத்திரத்திலேயே அருள் புரியும் இந்த திரௌபதி அம்மன் கோயிலின் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு செய்ய ஊர் மக்கள் முடிவெடுத்து திருப்பணி பணிகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 




கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 10-ம் தேதி யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜையும் தொடங்கியது. இன்று  4-ஆம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி வாத்தியம் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத கடத்தில் இருந்து புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 




பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர், மாநில ஆளுநர், தோனியின் புகைப்படம்; பீகாரில் பரபரப்பு!


பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன்  தலைமையிலானோர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


SIIMA Awards Winners: மூணுமே ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்ல.. சைமா விருதுகளை வென்ற டாப் 3 நடிகர்கள்!


மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஆதி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்! ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத்தெருவில் பிரசித்தி பெற்ற ஆதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் பல ஆண்டுகளுக்கு  முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்மை காரணமாக கோயில் சிதறமடைந்தது காணப்பட்டது.  இதையடுத்து கிராம மக்கள் கோயிலை புனரமைக்க முடிவெடுத்து பொதுமக்கள் பங்களிப்போடு கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. தொடர்ந்து  கும்பாபிஷேகமானது இன்று நடைபெற்றது. முன்னதாக  கடந்த 9 -ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று ஆறாம் கால யாக சாலை பூஜை நடைபெற்று, பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.




Gyanvapi case: ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு... பின்னனி என்ன? வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்!


தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள்  ஒலிக்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற