தென் மாவட்டங்களில் சிறுதெய்வங்கள் வழிபாடு மிக முக்கியாமான ஒன்று. தங்களது குலதெய்வ வழிபாட்டை பயபக்தியாக கடைபிடிப்பார்கள். இதில் சில முக்கிய விழாக்களில் நூதன முறையில் தங்களது பாரம்பரிய பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டு கொட்டும் மழையிலும் திறந்தவெளியில் விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது.


TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்




திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தருமத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கோட்டை கருப்பண்ணசாமி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆயுதபூஜையை அடுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒரு நாள் இரவு மட்டும் இந்த திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று இரவு கருப்பண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் முதன்மைக்காரர்கள் உள்ளிட்ட ஆண்கள் ஒன்று கூடி கோட்டை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து படைத்தனர்.


DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு




தொடர்ந்து கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து பச்சரிசி அன்னம் சமைக்கப்பட்டு உருண்டையாக உருட்டப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக கருப்பண்ணசாமிக்கு விடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டது. கருப்பண்ணசாமிக்கு உணவுகள் படைக்கப்பட்டதை தொடர்ந்து ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறிவிருந்து கொட்டும் மழையில் நள்ளிரவில் நடைபெற்றது.


“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!




திறந்த வெளியில் நடந்த கறிவிருந்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆண்கள் தரையில் அமர்ந்து உணவருந்தினர். விடிய விடிய நடந்த கறிவிருந்து அதிகாலையில் முடிவடைந்தது. இந்த திருவிழாவில் வத்தலகுண்டு, உசிலம்பட்டி, விருவீடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து கறிவிருந்தில் பங்கெடுத்தனர்.