Breaking Tamil LIVE: பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு

TN Rain News LIVE Updates: சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் மழை தொடர்பான தகவல்களை, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 16 Oct 2024 03:46 PM
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றவில்லை : மனுவில் குற்றச்சாட்டு

தூத்துக்குடி உப்பாற்று பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அதனுடன் சேர்த்து பட்டியலிட பதிவாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு காப்பர் கழிவுகளை 4 மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றவில்லை என மனுவில் குற்றச்சாட்டு

"வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது"

"வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர்

“ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை" : வானிலை மையம்

“ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. எனவே கரையைக் கடக்கும் போது ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம்” - வானிலை ஆய்வு மைய மண்டல தலைவர்

Breaking Tamil LIVE: பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைகளில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிப் பணிகளை, பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு செய்தார். 


சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்தார்.


பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாக ஆராய்ச்சி மாணவர் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

50 கிலோ சாரஸ் உள்ளிட்ட போதை பொருட்கள், தூத்துக்குடியில் பறிமுதல்  

தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ சாரஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்  


கடத்தலில் ஈடுபட்ட துரைப்பாண்டி என்ற நபரை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கைது செய்து போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைப்பு போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறை விசாரணை

உதகையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக மழை..

உதகையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என நிர்வாகம் தெரிவிப்பு

”போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றப்பட்டது” -தமிழ்நாடு அரசு

”3 ஆண்டுகளுக்கு முன்னர் 20 செ.மீ. மழை பெய்தால் ஒரு வாரம் மழைநீர் தேங்கும்.. இம்முறை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டது” -தமிழ்நாடு அரசு

செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது


சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நிலவரம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்


செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம், மதகுகள் செட்டர்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டுள்ளது எவ்வளவு நீர் தேக்கி வைக்க முடியும் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

புதுச்சேரி: 21ஆம் தேதி ரேஷன் கடைகள் மூலம் இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி தீபாவளி பரிசு


புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரும் 21ஆம் தேதி ரேஷன் கடைகள் மூலம் இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி தீபாவளி பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல்: கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், காற்றின் வேகம் அதிகரித்ததால் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

Chennai Rainfall Percentage : 24 மணிநேரத்தில் கத்திவாக்கம் பகுதியில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் கத்திவாக்கம் பகுதியில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

Udhayanidhi Stalin : எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை தான் - உதயநிதி ஸ்டாலின்

காய்கறிகளின் விலை குறைவு

"இன்னைக்கு காய்கறி வாங்க யாருமே வரல" - சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கருத்து

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டம்! இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது!

அம்மா உணவகங்களில் இலவச உணவு - முதல்வர் ஸ்டாலின்  அறிவிப்பு

அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து நிவாரண பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

சாம்சங் நிறுவனம் எங்களது கோரிக்கைகளை கேட்டுள்ளது - சிஐடியூ மாநில தலைவர் செளந்தரராஜன்

“அரசின் அழுத்தத்தால், சாம்சங் நிறுவனம் எங்களது கோரிக்கைகளை கேட்டுள்ளது. அரசின் முயற்சிக்கு பாராட்டுகள்” - சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிஐடியூ மாநில தலைவர் செளந்தரராஜன் பேட்டி

7,18,885 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, 7,18,885 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் 539 இடங்களில் மழைநீர் தேங்கியதில் 436 இடங்களில் தண்ணீர் அகற்றம்

TN Rain LIVE : 12 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

12 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.


வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.


முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 12 கி.மீ. ஆக சற்று அதிகரித்துள்ளது

பேருந்துகளும் வழக்கமான வழித்தடத்தில் இயங்கும் – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னையில் இன்று அனைத்து பேருந்துகளும் வழக்கமான வழித்தடத்தில் இயங்கும் – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு


 





"சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு"

"வாகனங்களை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம்" -பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆர்வலர்

"மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட வாகனங்களை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம்" -பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆர்வலர்

சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது - பிரதீப் ஜான் சொன்ன ஹேப்பி நியூஸ்

சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என தெரிவித்த அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் சென்னையில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்து, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரி நிலவரங்கள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நிலவரம் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 130 ஏரிகள் 75%-99% , 220 ஏரிகள் 51%-75%, 266 ஏரிகள் 26%-50%, 257 ஏரிகள் 25% கீழ்  நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49.9 மி.மீ மிதமான மழை அளவு பதிவு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49.9 மி.மீ மிதமான மழை அளவு பதிவு.
------------------------------------------


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை
காஞ்சிபுரத்தில் - 33 மில்லி மீட்டர்,


உத்திரமேரூர் - 24.4 மில்லி மீட்டர்,


வாலாஜாபாத்-29 மில்லி மீட்டர்,


ஸ்ரீபெரும்புதூர்- 59.2 மில்லி மீட்டர்,


குன்றத்தூர் 68.7 மில்லி மீட்டர்,


செம்பரம்பாக்கம் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.


மாவட்டம் முழுவதும் சராசரியாக 49.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் காலை 10 மணி வரை மழை தொடரும் - வானிலை மையம்

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஒகேனக்கல், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14000 கன அடியில் இருந்து 18000 கனஅடியாக உயர்ந்தது.

இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது 



செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி கொள்ளளவில் 13.61 அடி எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.6 டி எம் சி நீர் சேர்த்து வைக்க முடியும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டிஎம்சி நீர்  உள்ளது. 


செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை நிலவரப்படி 1060 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது ‌ . தற்போது மழை குறைந்திருப்பதால் ஏரிய நீர்வரத்து 863 கனஅடியாக சரிந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு குடிநீர் உள்ளிட்ட தேவை காரணமாக 134 கனஅடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 



கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் 85 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சேலத்தில் நாளை தனியார் பள்ளிகள் செயல்பட கூடாது... மீறினால் கடும் நடவடிக்கை

சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உரிய அறிவுறுத்தலின்படி, மழை காரணமாக அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  பாதுகாப்பு  மற்றும் நலன்கருதி அனைத்து வகை  தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் நாளை கண்டிப்பாக பின்பற்ற  வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறி செயல்படும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலர்,
தனியார்  பள்ளிகள்,
சேலம் மாவட்டம்

கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

வேளச்சேரி மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ; அங்கு யாரை சந்தித்தார் தெரியுமா..?

சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் நேரம், காலம் பார்க்காமல் பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களும் ஆங்காங்கே சென்று பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக  வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திமுக அரசுக்கு எதிரான பரப்புரைகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்து வரும் நிலையில், அதற்கு உடனுக்குடன் திமுக ஐ.டி விங் அணியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 


டி.ஆர்.பி. ராஜா கேட்டார் - முதல்வர் செய்கிறார் 


இந்நிலையில், சமூக வலைதளங்களில் களமாடும் ஐ.டி. விங் உறுப்பினர்களை ஊக்குப்படுத்தும் விதமாக சென்னை அறிவாலயத்தில் இந்த இரவிலும் பணியாற்றும் திமுகவினரை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி வருகிறார். திமுக தகவல் தொழில்நுட்ப செயலாளரும் தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல்வர் இந்த சந்திப்பை நடத்தி வருகிறார் .

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மற்றும் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்  ஏற்றப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளிப்பு.. சென்னையில் எங்கே தெரியுமா..?

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் புளியந்தோப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இங்குதான் காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கனமழை எச்சரிக்கை - பெங்களூரில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக பெங்களூரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கன மழை - முப்படைகளும் தயார் ...

தமிழ்நாட்டில் பெய்யும் கன மழையில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யவும், மீட்பு நடவடிக்கைகளுக்கும் முப்படைகளும் தயார் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது

சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையில் கிழக்கு தென்கிழக்கில் 490 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. 17 ஆம் தேதி காலை புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை இருக்கும் - சென்னை வானிலை மையம் தகவல்

TN Rain News LIVE: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

TN Rain News LIVE:  விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது

TN Rain News LIVE: கனமழையால் 7 விரைவு ரயில்கள் நாளை ரத்து

கனமழை காரணமாக 7 விளைவு ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. 


 





TN Rain News LIVE: சென்னை: பாஸ்போர்ட் அலுவலகம் இயங்காது

TN Rain News LIVE: சென்னையில் அதிகனமழை எதிரொலியால் , நாளை பாஸ்போர்ட் அலுவலகம் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ராணிப்பேட்டை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TN Rain News LIVE: 4 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் ட்ரோன் மூலம் உணவு பொருட்கள், வழஙக் அரசு திட்டமிட்டுள்ளது. 

TN Rain News LIVE: மணிக்கு 45 கி.மீ வேகம்; சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை

TN Rain News LIVE: காற்றழுத்த தாழ்வு நிலையானது, அடுத்த 36 மணி நேரத்தில் சென்னையை நெருங்கும்  எனவும், அப்போது மணிக்கு 46 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை எதிரொலி: சென்னையில் 15 மண்டலங்களுக்கு தலா ரூ.15 லட்சம்

கனமழை எதிரொலி காரணமாக சென்னையில் 15 மண்டலங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கிய சென்னை மாநகராட்சி


 





: TN Rain News LIVE: கனமழை எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை (அக்.16) விடுமுறை

TN Rain News LIVE: கனமழை எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

4 மாவட்டங்களில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை

4 மாவட்டங்களில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை 



TN Rain News LIVE: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டும் தற்போது 13.38 அடியாக உள்ளது. 260 கன அடியாக இருந்த நீர்வரத்து 1080 கன அடியாக உயர்ந்துள்ளது. 

TN Rain News LIVE: கனமழை எதிரொலி: சென்னையில் உள்வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு தடுப்பு சுவர்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலையெங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சென்னை அமைந்தகரை நெல்சன் மானிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தடுப்பு சுவர் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. 

TN Rain News LIVE: அனைத்து அரசு அலுவலங்களுக்கும் மாலை 4 மணியுடன் விடுமுறை

அரசு அலுவலகங்களுக்கு மாலை 4 மணியுடன் விடுமுறை அறிவித்து தலைமை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மாலை 4 மணியுடன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN Rain News LIVE: நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 16.10.24 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் தவிர அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN Rain News LIVE: சென்னையில் கனமழை எதிரொலி; 10 விமானங்கள் ரத்து

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகபட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்கள் தாமதமாக வருகின்றன. 

TN Rain News LIVE: கொட்டும் மழையால் மின்தடையா? சிறப்பு உதவி எண்கள்

கனமழை காரணமாக சென்னையில் மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கும், மின் விநியோகம் சீராக இருப்பதற்கும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவொற்றியூர்   - ஜெகதீஷ்குமார்  - 94458 50889


மணலி                     - ரங்கராஜ்              - 94458 50871


மாதவரம்                 - சௌந்தர்ராஜன் -94458 50344


தண்டையார்பேட்டை-  சுஜா                  - 94458 50900


ராயபுரம்                   - ப்ரேம்குமார்        - 94458 50686


திரு.வி.க. நகர்          - ஜெயச்சந்திரன்  - 94458 50909


அம்பத்தூர்                - மலைவேந்தன்     - 94458 50311


அண்ணாநகர்          - அன்பரசு               - 94458 50286


தேனாம்பேட்டை     - உதயகுமார்          - 94458 50717


கோடம்பாக்கம்        - வெங்கடேசன்      - 94458 50727


வளசரவாக்கம்         - வேல்முருகன்        -94458 50202


ஆலந்தூர்                   - நரேஷ்பாபு             - 94458 50179


அடையாறு                - ராமு                         - 94458 50555


பெருங்குடி                 - பாலசுப்ரமணியன் – 950065 9827


சோழிங்கநல்லூர்   - ப்ரேம்குமார்              - 94458 50164

TN Rain News LIVE: வெளுத்து வாங்கும் கனமழை: தொடங்கியது வடகிழக்கு பருவ மழை 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ஆம் தேதிவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த பருவ மழை கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று அரைநாள் மட்டும் விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று அரைநாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு பள்ளிக்குழந்தைகள் பத்திரமாக வீடு சேர்ந்துவிட்டனர் என்று தெரிந்தபிறகே ஆசிரியர்கள் புறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

"பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” -செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சர்

"கனமழை காலங்களில் உயிர்சேதம் ஏற்படாத அளவுக்கு மின் விநியோகம் செய்வது முக்கியம்.. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” -செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சர்

முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கொட்டும் மழையில் பணியாற்றும் அனைவருக்கும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ள நிலையில், 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்! தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ள நிலையில், 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மழை நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சாலையோர கடையில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்திய முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. அப்போது சாலையோர கடையில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார்!

"சென்னையில் 300 நிவாரண முகாம்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி

"சென்னையில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; நிவாரண மையங்களில், தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது;


20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து இடையூறு இல்லை; கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு சுமார் 1500 அழைப்புகள் வந்துள்ளன, அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன" :


கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“சென்னையில் சராசரியாக 4.6 செமீ மழை பதிவாகியுள்ளது. மழை விட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கிய நீர் அகற்றப்படுகிறது. சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆன்லைன் வகுப்புகள் கூடாது : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை பதிவு!

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை பதிவு! அயப்பாக்கத்தில், கடந்த ஒரு மணி நேரத்தில் (இன்று காலை 7-8 மணி) 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது!

TN Rain News LIVE : சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை! -சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேக்கம்; எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை! -சென்னை மாநகராட்சி தகவல்

மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் - பிரேமலதா

மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் - பிரேமலதா





தக்காளிக்கு நிலவும் தட்டுப்பாடு : கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைப் பட்டியல் இதோ

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 15.10.2024


வெங்காயம் 60/50/40
தக்காளி 120/110/80
உருளை  36/35/30
சின்ன வெங்காயம் 80/60/50
ஊட்டி கேரட்
70/60/50
கர்நாடக கேரட் 50/40
பீன்ஸ் 230/200/
பீட்ரூட். ஊட்டி 70/50
கர்நாடக பீட்ரூட் 40/30
சவ் சவ் 40/35
முள்ளங்கி 40/30
முட்டை கோஸ் 30/27
வெண்டைக்காய் 60/50
உஜாலா கத்திரிக்காய்
50/40
வரி கத்திரி 30/25
காராமணி 80/70
பாவக்காய் 50/40
புடலங்காய் 50/40
சுரக்காய் 30/25
சேனைக்கிழங்கி 70/60
முருங்ககாய் 70/60
சேமகிழங்கு 50/30
காலிபிளவர் 35/30
வெள்ளரிக்காய் 15/10
பச்சை மிளகாய் 90/80
பட்டாணி 250/180
இஞ்சி 180/160/150
பூண்டு 350/300/260
அவரைக்காய் 100/90
மஞ்சள் பூசணி 15/13
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 45/35
எலுமிச்சை 120/110
நூக்கள் 60/50
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 50/40
வாழைக்காய் 9/7
வாழைதண்டு,மரம் 30/25
வாழைப்பூ 30/25
குடைமிளகாய் /70/60
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 10
புதினா .5
கருவேப்பிலை 30
கீரை வகைகள் 15
மாங்காய் 90/50
 தேங்காய் 50/47

ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை குவித்த பொதுமக்கள்

TN Rain News LIVE: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது

TN Rain News LIVE: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது


தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்

சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு : புகார்களுக்கு தொடர்புகொள்க South & East 044-23452362 மற்றும் North & West 044-23452330

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்து காவல்துறை இது தொடர்பான புகார்களுக்கு : South & East 044-23452362 மற்றும் North & West 044-23452330

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நிலவரம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 105 ஏரிகள் 75%-100% , 188 ஏரிகள் 50%-75%, 275 ஏரிகள் 25%-50%, 315 ஏரிகள் 25% கீழ்  நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடியாக உயர்வு!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடியாக உயர்வு! ஏரியின் நீர்மட்டம் 13.23 அடியாக உள்ளது. தற்போது சென்னை குடிநீருக்காக 109 கன அடி நீர் கொண்டு செல்லப்படுகிறது.

கீழே அறுந்து விழுந்த மின்சார ஒயர் மிதித்ததில் வாலிபர் பலி

கீழே அறுந்து விழுந்த மின்சார ஒயர் மிதித்ததில் வாலிபர் பலி


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் தீலிப் குமார், வீட்டின் அருகாமையில் வீட்டிலிருந்து மின் கம்பத்துக்கு செல்லும் மின் ஒயர் அருந்து கீழே விழுந்துள்ளது, இதனை அறியாமல் சென்ற வாலிபர் மின் ஒயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை

செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில், 13.23 அடியாக நீர் உள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில், 13.23  அடியாக நீர் உள்ளது.  மொத்தம் 1.2 டிஎம்சி நீர் உள்ளது ‌.


செம்பரம்பாக்கம் ஏரிக்கு 260 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து குடிநீர் உள்ளிட்ட தேவைக்காக 134 கனஅடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 


செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது ‌

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பு

Background


  • சென்னையில் இடி, மின்னலுடன் சில மணி நேரங்களில் 5 செ.மீ., அளவுக்கு கொட்டிய கனமழை - தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் அகற்றம்

  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு இடையே துணை முதலமைச்சர் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு - கடந்தாண்டு போல் பாதிப்பு இருக்காது என உறுதி

  • வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெறுகிறது - கடலோர மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை

  • சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மழை முன்னெச்சரிக்கையாக விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

  • கோவையில் கனமழை காரணமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • கனமழை எச்சரிக்கை காரணமாக கடை வீதிகளில் குவிந்த மக்கள் - பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்

  • அல்ஜீரிய அதிபருடன் வர்த்தகம், முதலீடு பற்றி குடியசு தலைவர் திரவுபதி முர்மு ஆலோசனை

  • கனடாவின் தூதரக அதிகாரிகள் 6 பேர வெளியேற்றி மத்திய அரசு உத்தரவு - அந்நாட்டு அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும் கருத்து

  • காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் ஆண்டு இறுதி வரை பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

  • மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மருத்துவமனையில் அனுமதி

  • வியாழன் கிரகத்தின் நிலவுக்கு ”யுரோப்பா கிளிப்பர்” விண்கலத்தை அனுப்பிய நாசா

  • இஸ்ரேல் மீதான தாக்குதல் - லெபனானுக்கு ஐக்கிய அமீரகம் ஆதரவு

  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு அறிவிப்பு

  • மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்ட்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து - இந்தியாவின் கனவு தகர்ந்தது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.