“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!

Continues below advertisement

அதிமுகவில் இருந்த களைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளது கட்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

2025 ஆண்டிற்குள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் அந்த கட்சியில் இணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் குறிப்பிட்டு வரும் நிலையில், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மாதிரி எடப்பாடி பழனிசாமி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலாவும், அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடமிருந்து மீட்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் டிடிவி தினகரனும், அதிமுக தொண்டர் மீட்பு அணியை உருவாக்கியுள்ள ஓபிஎஸும் விரைவில் அதிமுகவில் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தன்னுடைய பதிவு மூலம் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கிறார்

Continues below advertisement