தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கெளமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி சட்டி, காவடி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
CM stalin On Annamalai: இறங்கி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
மேலும் இந்த திருவிழாவை காண தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இங்கு ஆண்டுதோறும் 8 நாள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழா நேற்று முதல் தொடங்கியது.
இதையொட்டி கவுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதற்கிடையே காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடினர். பின்னர் அவர்கள் ஆற்றங்கரையில் அக்னி சட்டிக்கு யாகம் வளர்த்து மேள, தாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் முன்பு உள்ள பெரிய தொட்டியில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் கரகம், காவடி, ஆயிரம் கண்பானை, மண்கலயத்தில் தீர்த்தம் மற்றும் உடலில் சேறு பூசி, சேத்தாண்டி வேடமிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் தங்களது குழந்தைகளுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 1 மணியில் இருந்தே பக்தர்கள் வரத்தொடங்கினர். இதனால் உப்புக்கோட்டை விலக்கில் இருந்து உப்பார்பட்டி விலக்கு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கூட்டம் கடல் அலைபோல் திரண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்