MI vs GT, IPL 2023 LIVE: ரஷித் கான் அதிரடி ஆட்டம் வீண்... 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை
MI vs GT IPL 2023 LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இனைந்து இருங்கள்.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி - 219 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டும் எடுத்தது.
219 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் குஜராத் அணி 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் - மும்பை அணி வீரர்கள் அபார பந்து வீச்சு
குஜராத் அணி வீரர் டேவிட் மில்லர் 41 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆகாஷ் மேத்வேல் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
குஜராத் அணி தனது 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணி வெற்றி பெற 60 பந்துகளில் 137 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் அணி தனது 5வது விக்கெட்டை இழந்தது. 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்ததால் அந்த அணி ரசிகர்கள் சோகம்
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி வீரர் விஜய் ஷங்கர் 14 பந்துகளில் 29 ரன்கள் குவித்த நிலையில் பியுஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்தில் 103 ரன்கள் குவித்தார். இது ஐபிஎல் தொடரில் இவரது முதல் சதமாகும்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள்ளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது.
19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 18வது ஓவரை மோகித் சர்மா வீச அந்த ஓவரில் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் என சூர்யகுமார் யாதாவ் விரட்டியுள்ளார். இந்த ஓவர் முடிவில் மும்பை அணி 184-5
இறுதியில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 3 பந்தில் 5 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ரஷித் கான் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
களமிறங்கியது முதல் சிறப்பாக ஆடி வரும் சூர்ய குமார் யாதவ் 32 பந்தில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார்.
16வது ஓவரின் இறுதிப் பந்தில் அதிரடியாக ஆடிவந்த வினோத் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் வினோத் குஜராத் அணியின் முகமது ஷமி ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து பறக்கவிட்டார்.
3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வரும் மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வரும் மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை அணியின் ரோகித் சர்மாவை வீழ்த்தியதையடுத்து இஷான் கிஷனையும் வதேராவையும் வீழ்த்தினார் குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.
அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழக்காமல் 61 ரன்கள் எட்டியுள்ளது.
5 ஓவர்களி மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் மும்பை அணி 6 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நேருக்கு நேர் மோத உள்ள மும்பை மற்றும் குஜராத் அணிகளின், பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மும்பை - குஜராத் மோதல்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், இன்றைய போட்டியில் வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தும் நோக்கிலும் மும்பை அணி களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குஜராத் அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்நிலையில் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
குஜராத் அணி கடந்தாண்டு தான் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான நிலையில், மும்பை அணியுடன் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளது. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில், நடப்பு தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்றாவது முறையாக இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அசத்திய வீரர்கள்:
அதிக ரன்கள் எடுத்த வீரர் - சுப்மன் கில், 108 ரன்கள்
ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் எடுத்த வீரர் - சுப்மன் கில், 56 ரன்கள்
அதிக விக்கெட் எடுத்த வீரர் - ரஷீத் கான், 4 விக்கெட்கள்
ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் - நூர் அஹமது, 3 விக்கெட்கள்
வான்கடே மைதான புள்ளி விவரங்கள்
வான்கடே மைதானத்தில் மும்பை அணி இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 47 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மும்பை அணி மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. வான்கடே மைதானத்தில் நடப்பு தொடரில் 5 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் 4 முறை வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு தொடரில் சராசரியாக முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் - 193
நடப்பு தொடரில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு - 213
- - - - - - - - - Advertisement - - - - - - - - -