Palani Murugan Temple: ரூ.5 கோடியை தாண்டிய பழனி கோயில் உண்டியல் வசூல் - எத்தனை நாளில் தெரியுமா?

இரண்டு நாட்கள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 5 கோடியே 64 இலட்சத்து 69 ஆயிரத்து 457 கிடைத்தது.

Continues below advertisement

பழனி கோயில் உண்டியல்கள் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. இதையடுத்து கடந்த இருநாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.5.64 கோடியை தாண்டியது.

Continues below advertisement

TNPSC Group 2 Exam 2024: நாளை குரூப் 2, 2ஏ தேர்வு; தேர்வர்கள் என்னவெல்லாம் செய்யலாம்? கூடாது? வழிமுறைகள் இதோ!

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் அமைந்திருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவதுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.


சென்ற மாதம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் முத்தமிழ் முருகர் மாநாடு, விநாயகர் சதுர்த்தி தொடர்விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 39 நாட்களில் உண்டியல் நிரம்பியது.  இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் முதல் நாள்  எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு 3 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரத்து 873 கிடைத்தது.

கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு


உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1,237 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 638  கிராமும் கிடைத்தது.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,012  ம் கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  

“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

இதையடுத்து அடுத்த நாள் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து எண்ணப்பட்டது.  இருநாள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 5 கோடியே 64 இலட்சத்து 69 ஆயிரத்து 457 கிடைத்தது.  உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  


தங்கம் 1,612 கிராமும், வெள்ளி 28,249 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,734 ம் கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.   உண்டியல் எண்ணிக்கையில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

Continues below advertisement