குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்
’குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது’ என்பது தமிழகத்தில் பரவிக்கிடக்கும் பழமொழிகளில் ஒன்று. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரூம் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட கோயிலாக குன்றக்குடி முருகன் கோயில் பார்க்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் பிராத்தனைத் தலங்கலில் மேன்மை வாய்ந்தது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றை குன்றக்குடி குமரனிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.
குன்றக்குடி மயில் மலை
குன்றக்குடி மலையானது முருகனின் ஊர்தியான மயில், அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்துள்ளது, என்பதும் குறிப்பிடதக்கது. குன்றக்குடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோயில் ஸ்தலமாகும். இதனால் பிள்ளையார்பட்டிக்கு வரும் பக்தர்கள் குன்றக்குடி முருகனையும் தரிசித்து செல்வார்கள். இந்நிலையில் முக்கியமான பார்க்கப்படும் குன்றக்குடி கோயிலின், யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானை இறப்பு அப்பகுதி மக்களிடம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
குன்றக்குடியில் சண்முகநாதர் திருக்கோயிலுக்கு கடந்த 1971- ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார். குன்றக்குடி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிப்பில் யானை வளர்ந்து வந்தது. தற்போது சுப்புலெட்சுமி யானைக்கு 53 வயதாகிறது. இந்நிலையில் நேற்று கோயிலின் அடிவாரத்தில் கட்டிக் கிடந்த யானை அப்பகுதியில் நேர்ந்த தீ விபத்தால் படுகாயம் அடைந்தது. தீ பரவியவுடன் யானை தலை தெரிக்க ஓடியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து யானையை மீட்டு கோயில் மடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யானை சுப்புலட்சுமி இன்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தது. இதனை அறிந்த முருக பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.