விழுப்புரம்: திண்டிவனத்தில் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது.
ரயில்வே ஊழியர் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மர்ம நபர்
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார் என்பவர் திண்டிவனம் ரயில் நிலையத்தில் சிக்னல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டிவனத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் இவரும் இவரது மனைவியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதில் சுவரை எகிரி குதித்து சந்திப் குமாரின் வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டார். அப்பொழுது சந்திப் குமாரின் மனைவி வீட்டில் வெளியிலிருந்து உள்ளே சென்றபோது கட்டிலுக்கு அடியில் இருந்த மர்ம நபர் சந்திப் குமாரின் மனைவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அச்சமடைந்த அவர் கூச்சலிட்டார்.
தலைதெரிக்க ஓடிய மர்மநபர்
கூச்சலிட்டதை தொடர்ந்து மர்ம நபர் தலைதெரிக்க ஓடிய நிலையில் அவரை துரத்தி பிடிப்பதற்காக சந்திப் குமார் சென்றுள்ளார். மர்ம நபர் அப்பொழுது அங்கிருந்த சுவர் மீது ஏறி குதித்து தப்ப முயன்ற போது கை கால்களில் அடிபட்டு இரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்றுள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் விபத்து ஏதோ நடந்துள்ளது என அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
இந்த நிலையில் ரயில்வே ஊழியர் சந்தீப் குமார் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்த பாலு மகேந்திரன் என்பதும் அவர் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாவட்ட எஸ்பி உத்தரவு
இந்த நிலையில் பாலு மகேந்திரனை காப்பாற்ற திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு சில அரசியல் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்திய வந்தனர் . நேற்று நள்ளிரவு நடைபெற்ற சம்பவத்திற்கு மாலை ஐந்து மணி வரை வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து நீடித்துக் கொண்டே இருந்தது இந்த நிலையில் மாவட்ட எஸ் பி கே புகார்தாரர் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே ஊழியரின் மனைவியிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment)
பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment) என்பது வெளிப்படையான அல்லது மறைமுகமான பாலியல் செயல்களைச் செய்வதனை உள்ளடக்கிய ஒரு வகை துன்புறுத்தல் ஆகும். பாலியல் துன்புறுத்தல் வாய்மொழி மீறல்கள் முதல் பாலியல் முறைகேடு அல்லது தாக்குதல் வரை பல செயல்களை உள்ளடக்கியது ஆகும். பணியிடம், வீடு, பள்ளி, தேவாலயங்கள் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளில் தொல்லைகள் ஏற்படலாம். துன்புறுத்துபவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் எந்த பாலினம் அல்லது பாலினத்தவராக இருக்கலாம்