அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1, 2-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து 4-ந் தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில், துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஒவ்வொரு உண்டியல்களாக திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில் நாணயங்களை எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. அதன்பின்னர் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
புல்லட்டின் சிவன், பார்வதி.. உத்தரமேரூர் ரைடு.. காஞ்சியில் மாஸாக மயான கொள்ளை திருவிழா..
JP Nadda: ”அதிமுக உட்பட அனைத்தும் குடும்பக் கட்சிகள்” - பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சனம்
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 479 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 401 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 264 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 5 கிலோ 820 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை இன்றும் புதன்கிழமை நாளையும் நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்