மயிலாடுதுறை வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வாழ்வு செழிக்க வேண்டி சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் வண்டிக்கார தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் வியாபாரிகளுக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் வேண்டியதை தந்து அருள்பாலிக்கும் தெய்வமாக விளங்கி வருகிறார்.
EPS Statement: மிக்ஜாம் புயல் நிவாரணத்தை ரூ.12000-மாக உயர்த்த வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!
இதனால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். புகழ்வாய்ந்த இவ்வாலயத்தில் இன்று உலக நன்மை வேண்டியும், மிக்ஜாம் புயல் பாதிப்பு நீங்க வேண்டியும், ஊர் செழிக்கவும் நம்ம மாயவரம் நண்பர்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் சார்பாக சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து நிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்கள் கஷ்டங்கள் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி ஸ்ரீ பிரசன்ன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு செய்தனர்.
Tirumala Tirupati: பக்தர்களே! வரும் 19-ம் தேதி 4 மணி நேரம் தரிசனம் ரத்து - காரணம் இதுதான்!