பஞ்ச நரசிம்ம ஆலயங்களில் ஒன்றான திருவாலி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


பஞ்ச நரசிம்மர் தலங்கள்


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருநகரியில் யோகநரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், மங்கைமடத்தில் வீரநரசிம்மர், திருக்குறையலூரில் உக்கிரநரசிம்மர், திருவாலியில் லெட்சுநரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் தலங்கள் தொகுப்பாக அமைந்துள்ளன. இதில், திருவாலியில் லெட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் மூலவர் லெட்சுமி நரசிம்மப் பெருமாள் லெட்சுமி பிராட்டியுடன் அருள்பாலிக்கிறார்.


Watch Video : திடீர் திருமண கோலத்தில் மாநாடு பட நடிகை... வீடியோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்




1500 ஆண்டுகள் பழமையான கோயில் 


திருமங்கையாழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இதுவாகும். மற்ற கோயில்களில் இல்லாத வகையில் இக்கோயிலில் மட்டும் தாயார் பெருமாளின் வலதுபுற தொடையில் வீற்றிருப்பது சிறப்புக்குரியது. மேலும் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். லஷ்மி தேவியை நரசிம்ம பெருமாள் மடியில் அமர்த்தியபடி சாந்த சுரூபமாக காட்சியளிப்பதால் இங்கு வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். 


Watch Video: "விராட் கோலி கிட்ட சொல்லுங்க" ரசிகைக்கு ரோகித் ஷர்மா சொன்ன பதில் என்ன?




கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றல்


இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னெடுப்பில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 18 -ம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 19 -ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேக தினத்தில் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு,


‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!




மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வளம் வந்து கோயில் விமானத்தை அடைந்தன. இதனை அடுத்து ரோகிணி நட்சத்திரம் பஞ்சமி திதி விருச்சிக லக்னத்தில் காலை 9:15 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத கோயில் அர்ச்சகர் சிவராம பட்டாச்சார் தலைமையிலானோர் விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனையடுத்து தாயாருடன் பெருமாள் கோயில் உள் பிரகார வீதி உலா வந்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


ABP Southern Rising Summit 2024: சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பிரபலங்களும், பேசப்போகும் தலைப்புகளும்..! - நிகழ்ச்சி நிரல்