மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற பழமையான திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. 




திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம்.  


Citadel Priyanka Chopra: ஸ்பை உலகில் பிரியங்கா சோப்ரா.... 2-வது மெகா பட்ஜெட் சீரிஸ்... அதிரடி தமிழ் ட்ரெய்லர் வெளியீடு!




இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தில் மாசிமக பெருவிழா  கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி புறப்பாடு, வீதியுலா நடைபெற்றது வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சோமாஸ்கந்தர் பச்சை நிற பட்டு அம்மன் மஞ்சள் பட்டுத்தி திரு ஆபரணங்கள் அணிந்து பல்லக்கில் வெள்ளி ரிஷப வாகனத்தில்தில் எழுந்தருளினர். 


Elephants Dead: அதிர்ச்சி.. விவசாய தோட்டத்திற்காக வைக்கப்பட்ட மின் வேலி.. எதிர்பாராமல் சிக்கி உயிரிழந்த 3 யானைகள்!




தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலாவாக காவேரி கரை வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த  திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.  விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


MK Stalin: கலவரம் செய்து திமுக ஆட்சியை அகற்ற சதி.. முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆவேசம்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண