தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் அன்று புனித தீர்த்தங்களில் நீராடவும், முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது  ஐதீகம். அதேபோன்று மாசி மகம் அன்றும், புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். 




ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோன்று மாசி மகதன்றும் வழிபாடு நடைபெறுகிறது.


Amitabh Bachchan Gets Injured: ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம்.. உடனடியாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு.. என்னாச்சு?




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை, மாசி மகம் போன்ற நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் ஏராளமானோர் படை எடுப்பார்கள். 


E-Cigarette: தடைக்குப் பிறகும் தலைவிரித்தாடும் இ- சிகரெட்: போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க அன்புமணி வலியுறுத்தல்




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள்  உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.  


Jemimah Rodrigues Dance Video: போட்டியின் நடுவே ’க்யூட்’ நடனம்.. மைதானத்தில் மனதை பறித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்!




இந்நிலையில் இன்று  ஏராளமானோர் அதிகாலை முதல் தங்கள் முன்னோர்களுக்கு கீரை வகைகள், பச்சை காய்கரிகள், பச்சரிசி, பூசணிக்காய், வெல்லம் உள்ளிடவற்றி வைத்து பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்தும்  பூஜைகள் செய்து செய்த கரையில் உள்ள சிவாலயங்களில் தரிசனம் செய்து  வருகின்றனர். மேலும் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லாத நிலையில் புனித துலா கட்ட புஷ்கர தொட்டியில் பொதுமக்கள் புனித நீராட மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி வரும் 24இல் மனித சங்கிலி போராட்டம் - ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண