மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தருமபுரி மாவட்டம் பஞ்ச பள்ளியை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான பாளையம் புதூர், எங்கிட்ட அள்ளி, நம்மாண்ட அள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலாக 5 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வந்துள்ளது. இதையடுத்து, யானைகளால் பொதுமக்களுக்கு எந்தவித அசாம்பிதமும் ஏற்பட கூடாது என்று பாலக்கோடு வன சரக்கத்தினர் அவ்வப்போது சென்று இந்த ஐந்து யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டி வந்துள்ளனர்.


இந்தநிலையில், மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் பெங்களூரைச் சேர்ந்தவரின் 15 ஏக்கர் நிலத்தை காளி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் குத்தகைக்கு கெடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியை கடக்கும்போது மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.


மேலும், தாய் யானை உயிரிழந்ததை அறியாத 2 குட்டி யானைகளும் அருகிலேயே சுற்றி சுற்றி வருகிறது. உயிரிழந்த இந்த மூன்று காட்டு யானைகளும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை 1 ஆண் யானை ஆகும்.


தகவலறிந்த வந்தபாலக்கோடு வனத்துறையினர் விசாரணை நடத்தி குத்தகைதாரர் ஆன முருகேசன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று யானைகளையும் மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 20 பேர் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு குட்டி யானைகளை காட்டுக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் இதே சென்ற ஆண்டு மே மாதம் மக்னா யானை இதே போல் மின்சாரம் தாக்கி இறந்தது குறிப்பிட தக்கது. இந்த பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இதுபோல வனவிலங்குகள் அச்சம் அதிகமாக இருப்பதாலும் விளை நிலங்களை நாசப்படுத்தி விடும் என்ற அச்சத்தாலும் இதுபோல மின்வெளி அமைக்கும் பணியில் நிறைய விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் இது வனவிலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் ஆபத்தான ஒரு நிகழ்வாக அமைந்து விடுகிறது.