திருக்கடையூர் அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.


எமன் உயிர்ப்பித்த இடம் இதுதான் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். 


T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பையில் ரோஹித்துடன் ஓபனிங் செய்யும் கோலி.. தேர்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதா முடிவு?




ஆண்டின் 365 நாட்களும் திருமணம் கோயில் 


இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். 


Bigg Boss Malayalam: நிச்சயதார்த்தம் நடந்ததை மறைத்து காதலித்தாரா ஜாஸ்மின்? மலையாள பிக்பாஸில் வெடித்த சர்ச்சை!




 


திருக்கடையூர் கோயில் சித்திரை திருவிழா 


இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து மாலை மாற்று உற்சவத்துடன், சீர்வரிசை எடுத்துவர திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


ABP – C-VOTER OPINION POLL : தமிழகத்தில் திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட கள நிலவரம்.. எந்தெந்த தொகுதிகளில் வெற்றி யாருக்கு?