மலையாள நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர் தனக்கு நிச்சயம் நடந்ததை மறைத்து சக போட்டியாளருடன் நெருக்கமாக பழகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்தியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் வெற்றிகரமாக பல சீசன்களை கடந்துள்ளது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட 7 சீசன்கள் தமிழில் நிறைவடைந்துள்ளது. அதேசமயம் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 


இந்த நிகழ்ச்சியில் 6வது சீசன் கடந்த மார்ச் 10 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 25 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் அதில் 6 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவர் தானாக வெளியேறினர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்ரி மற்றும் ஜாஸ்மின் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் இவர்கள் இருவரும் தான் காதல் பறவைகளாக வலம் வருகின்றனர். ஆரம்பத்தில் நட்பாக பழகிய நிலையில் ஒருகட்டத்தில் கேப்ரியை எனக்கு ரொம்ப பிடித்திருப்பதாக நடிகை ஜாஸ்மின் கூறியிருந்தார். 






அதேசமயம் இவர்கள் இருவருக்கும் எதிரான நிலைபாட்டில் பிக்பாஸ் வீட்டின் சக போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஜாஸ்மினிக்கு அப்சல் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் உள்ளே வந்த பிறகு அதனைப் பற்றி தெரிவிக்காமல் கேப்ரியிடம், தான் ஒருவருக்கு வாக்குறுதி அளித்ததாக தெரிவித்ததாக சக போட்டியாளர் பூஜா கூறியுள்ளார். இந்த கருத்துகள் எல்லாம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 


கேப்ரி, ஜாஸ்மின் இருவருக்கும் தங்களுடைய காதல் நீண்ட நாட்கள் நிலைக்காது என்பது நன்றாக தெரியும். அதேசமயம் பிக்பாஸ் முடிந்து வந்த பிறகு, அந்நிகழ்ச்சியால் ஜாஸ்மினுக்கு அவப்பெயரும், திருமணம் நடைபெறுவதில் சிக்கலும் எழலாம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் ஜாஸ்மின் நடந்துகொள்வதை அவரது குடும்பத்தினர் கூட ஆதரிக்க மாட்டார்கள் என பலரும் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.