மயிலாடுதுறை ஶ்ரீ பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு 1001 கலசங்களில் புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு ஶ்ரீ சுகந்தவனநாயகி, ஶ்ரீசுகந்தவனநாதர், ஸ்வாமிக்கு புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 


ஶ்ரீ பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா


மயிலாடுதுறை ஶ்ரீ பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு 1001 கலசங்களில் புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு ஶ்ரீ சுகந்தவனநாயகி, ஶ்ரீசுகந்தவனநாதர், ஸ்வாமிக்கு புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 


காரில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டர் பாண்டி சாராயம் காருடன் பறிமுதல் - 3 பேர் கைது




கோயிலின் சிறப்புகள்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் அமைந்துள்ள இந்த சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமையான பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் திருக்கோயில். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் இது ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமும் ஆகும். 


யாசகம் கேட்ட சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞர்: சிக்கியது எப்படி?


இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 24 -ம் தேதி ஸம்ப்ரோசணம் என்று அழைக்கப்படும் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்ற வந்த நிலையில் இன்று ஶ்ரீ இராமானுஜர் பக்த கைங்கர்ய ஸபா டிரஸ்ட் சார்பில் மண்டலாபிஷேக பூர்த்திவிழா நடைபெற்றது. 




1001 கலசங்களில் புனிதநீர் கொண்டு அபிஷேகம்


இதனை முன்னிட்டு ஶ்ரீ சுகந்தவனநாயகி, ஶ்ரீ சுகந்தவனநாதர், ஸ்வாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு 1001 கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு ஹோமம், பூரணாகுதி, மகாதீபாரதனை, சுவாமி, தயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட 1001 புனித கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் தொடர்ந்து பல மணி நேரம் வரை நடைபெற்றது. தொடர்ந்து  பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பெருமாள் வீதியுலா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


TNPSC Group 4: கட்டாயம் இதை செய்யுங்க.. குரூப் 4 தேர்வில் பாஸாவது நிச்சயம்..! கடைசி நேர டிப்ஸ் தரும் பிரபல பயிற்சியாளர்!