சீர்காழியில் யாசகம் கேட்ட நின்ற  சிறுமியிடம் உணவு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


யாசகம் கேட்ட சிறுமி கடத்தல்


விழுப்புரம் மாவட்டம் பெரியசேவலை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு என்பவரின் மகன் 40 வயதான மாயவன். இரண்டு கண்களிலும் பார்வை அற்ற இவர், ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கமாக யாசம் கேட்பதற்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்துள்ளார். கண்பார்வை அற்றவர் என்பதால் இவருக்கு துணையாக மாயவனின் தங்கை மகள்களான 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளை அழைத்து வந்துள்ளார்.


Star Movie OTT Release: சர்ப்ரைஸாக ஓடிடியில் வெளியான கவினின் “ஸ்டார்” படம்.. எந்த ஓடிடி தளம் தெரியுமா?




உணவு வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்ற இளைஞர் 


இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை சீர்காழி கடைவீதி மணிக்கூண்டு பகுதியில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று பேருக்கும் உணவு வாங்கி தருவதாக கூறி, சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தங்கை மகள் வராது கண்டு அதிர்ச்சி அடைந்த மாயவன் அருகில் இருந்தவரிடம் இதுகுறித்து தெரிவித்து உதவி கேட்டுள்ளார். உடனே அவர்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைத்து செல்வது தெரியவந்தது. 


NEET Result 2024: நீட் குளறுபடிகள்; எழும் சந்தேகம்- தேர்வையே ரத்து செய்ய ஈபிஎஸ் வலியுறுத்தல்




மடக்கி பிடித்த காவல்துறையினர் 


இதனை அடுத்து சீர்காழி நகர முழுவதும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம் வழியாக சிறுமியை ஒருவர் அழைத்து செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த வழியாக சென்று பார்த்தபோது சிறுமியை அழைத்து செல்லும் நபரை காவல் துறையினர் மடக்கி பிடித்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரனையில், அந்த நபர் சீர்காழி அருகே கோவில் பத்து கிராமம் காமராஜர்புரத்தை சேர்ந்த ரவி என்பவரது 32 வயதான மகன் ரஞ்சித் என்பதும்,  சிறுமி ஆசை வார்த்தை கூறி அந்த நபர் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைந்துள்ளனர். மேலும் புகார் அளித்த உடனே துரிதமாக செயல்பட்டு சிறுமியை விரைவாக மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


TN Assembly Session: ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - காரணம் என்ன?