மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற செங்கமலவல்லி உடனாகிய ஸ்ரீ ஆமருவியப்பன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு  நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


வரலாறு சொல்லும் கதை


உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேரில் வரும்போது தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்று இருந்தான். ஒருமுறை அந்த மன்னன் மேலே சென்றபோது தேரின் நிழல் கண்ணனின் மீதும், அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. இதனால் பசுக்கள் துன்பம் அடைந்தன.


தேவையில்லாமல் கவலை படாதீங்க...கோயிலில் உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் இதுதான் அர்த்தம்!




மன்னனின் செருக்கை அடக்க நினைத்த கண்ண பெருமான், தேர் நிழல் மீது தனது திருவடியை வைத்து அழுத்தினார். அப்போது மன்னனின் தேர் கீழே அழுத்தியது, அத்துடன் அவனது ஆணவமும் அழிந்தது என்பது புராணம். இதனால் இத்தலம் தேரழுந்தூர் என பெயர் பெற்றது.


மேலும், இத்திருத்தலம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊராகும். பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10 -வது திவ்ய தேசமாகும்.


https://tamil.abplive.com/auto/honda-activa-limited-edition-scooter-launched-at-rs-80-734-check-the-details-here-142532




இக்கோயிலில் மூலவர் ஸ்ரீ தேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். புகழ் வாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தேசிகன் உற்சவத்தையொட்டி பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேசிகர் உற்சவத்தையொட்டி  கோயில் குளத்தில் பெருமாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மூன்று சுற்று சுற்றுகள் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


சத்குருவின் சிறப்பு கட்டுரை: இந்தியா “உலகிற்கே உணவுக் களஞ்சியம்” ஆகமுடியும். கவனம் அளவின் மேல் இருக்கவேண்டும்..!