தேவையில்லாமல் கவலை படாதீங்க...கோயிலில் உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் இதுதான் அர்த்தம்!
பொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை ஆராய்ந்துதான் வாங்குவோம். அது நல்ல தேங்காயை இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமில்லாமல், அழுகிய தேங்காய் அபசகுணத்தை குறிக்கும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேங்காயில் இருக்கும் மூன்று கண்களும் ஒவ்வொரு கடவுளை குறிக்கிறது என்பது நம்பிக்கை. முதலில் பிரம்மன், இரண்டாவது லட்சுமி, மூன்றாவது சிவன் என்பது ஐதீகம்.
தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் அழுகி இருந்தால், எந்தவொரு பிரச்சினையும் வராது. இன்னும் சொல்லப்போனால், அது நன்மையைதான் குறிக்கும்.
இதன் மூலம், தீய சக்திகள், பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று சொல்லப்படுகிறது.
தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையாக இருந்தால், அந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தமாம்.
அதுவே, உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்று நம்பப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -