மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆயிரத்துக்கு சொந்தமான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் வருகிற மே 24 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இயற்றிய "ஓருருவாயினை" என தொடங்கும் தேவாரப் திருப்பதிகத்தினை ஒரு கோடி முறை ஓதுவதற்கு திட்டமிடப்பட்டது.




அதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், அத்திட்டத்தை  உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கடந்த 12 -ஆம் தேதி திருக்குவளையில் தொடக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, ஆதீன கிளை மடங்கள், ஆதீன கல்வி நிலையங்களில் இப்பதிகம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் அனைத்து மதத்தினர் இணைந்து "ஓருருவாயினை" தேவாரப்பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Ideas Of India 2023: ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆப் இந்தியா மாநாடு..! கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றி உரையாற்றும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!




தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் பதிகத்தை பராயணம் செய்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். தருமபுரம் ஆதீனக் கல்லூரி செயலாளர் செல்வநாயகம், இஸ்லாமியர் சார்பில் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் மற்றும் இப்ராஹீம், கிறிஸ்தவர் சார்பில் மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பவுல்ராஜ், யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேவாரப்பதிகத்தை பாராயணம் செய்தனர்.


EXCLUSIVE: ஓபிஎஸ் எதிர்காலம் நாசமா போச்சு, முடிஞ்சு போச்சு... திண்டுக்கல் சீனிவாசன் ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி!




இதேபோன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் பாராயண நிகழ்வு நடைபெற்றது. மாணவர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் என 2600 பேர் தலா 3 முறை என மொத்தம் 7800 முறை பாராயணம் செய்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து, ஆதீன கல்லூரி செயலர் செல்வநாயகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விளக்கி தொடங்கி வைத்தார்.


RTE: இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கை - நிலுவை கட்டணத்தை உடனே வழங்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்