வெங்கமேடு ஸ்ரீ கருப்பணசுவாமி ஆலய மாசி மாத 37 ஆம் ஆண்டு திருவிழா.


கரூர், வெங்கமேடு நேருநகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பணசுவாமி ஆலய மாசி மாத 37 ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.


 




 


திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி மாரியம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து நிகழ்ச்சியை முன்னிட்டு பெண் பக்தர்கள் தங்கள் இல்லத்தில் முளைப்பாரி விட்டு, முளைப்பாறையை தலையில் சுமந்தவாறு ஆலயம் வந்தனர்.


 




 



தொடர்ந்து வான வேடிக்கையுடன் தாரை தப்பட்டைகள் முழங்க ஆலயத்தின் பூசாரி மாரியம்மன் கரகத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக சுவாமி கரகம் சுவாமி கிணற்றிற்கு வந்து அடைந்தது.


அதை தொடர்ந்து சுவாமி கிணற்றிற்கு சிறப்பு பூஜை நடைபெற்று மாரியம்மன் கரகம் கிணற்றில் விடப்பட்டது. வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ கருப்பண சுவாமி ஆலய 37 ஆம் ஆண்டு மாசி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


 


 




 


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.