கொட்டும் மழையில் நடைபெற்ற தில்லையாடி ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தவாறு தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.


ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமையான இக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


Border-Gavaskar Trophy:பார்டர் கவாஸ்கர் டிராபி;என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க! மிரட்டும் பேட் கம்மின்ஸ்




யாகசாலை பூஜை 


கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினத்தில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு, மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. 


Nuclear Bomb: பேரழிவுக்கான ஆயுதம்..! அணுகுண்டு எப்படி வெடிக்கும் என தெரியுமா? டெட்டனேட்டரின் வேலை என்ன?




புனிதநீர் ஊற்றல்


மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


Minister Raja Kannappan API: ”ரூ.400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்” - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு




கொட்டிய கனமழை


பின்னர் மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தருமபுரம் 27 வது ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகத்தின் போது கனமழை பெய்த போது கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.


Mudichur Omni Bus Stand: தீரும் தலைவலி..‌ ஆம்னி பேருந்துகளுக்கு பிரம்மாண்ட பேருந்து நிலையம்.. பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?