Mudichur Omni Bus Stand: சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 42.70 கோடி மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த  பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் kilambakkam new Bus stand


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில், கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில்  சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நிலை என்ன ?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள்,  விடுமுறை நாட்கள், பௌர்ணமி, அமாவாசை, சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆகாயம் மேம்பாலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பும் பெற்று வருகிறது.


ஆம்னி பேருந்துகள் நிலை என்ன?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருவதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் இல்லாததால் அவதி அடைந்து வருகின்றன. 


முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் - Mudichur omni bus stand 


ஆம்னி பஸ் உரிமையாளா்கள் கோரிக்கையை ஏற்று, வண்டலூர் வெளிவட்டச் சாலை முடிச்சூர் அருகே, 5 ஏக்கா் பரப்பில் ஒரே நேரத்தில் 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு இந்த பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100 போ் தங்கும் அளவுக்கு இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கா வண்ணம் நிலத்திலிருந்து உயா்த்தி கட்டப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கான இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடப்பட்டது.


 பயன்கள் என்னென்ன ?


இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆம்னி பேருந்துகள் இனி, முடிச்சூர் பகுதியில் இருந்து இயக்கப்படும், இதன் மூலம் போக்குவரத்து பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கும், கூடுதல் பேருந்துகளை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் சொன்னது என்ன ?


இந்தநிலையில் இன்று அமைச்சர் சேகர்பாபு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: முடிச்சூரில் அனைத்து வசதிகளுடன் 150 பேருந்துகள் நிறுத்த கூடிய ஆம்னி பேருந்து நிலையத்தை‌  முதலமைச்சர் திறந்து வைப்பார் என தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு முடிச்சு ஆம்னி பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.