பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு ஆவலாக உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரை தொடர்ந்து சரியாக இன்னும் ஒரு மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இதில் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிதான் இந்த கோப்பையை கைப்பற்றி வருகிறது. இதனால் இந்த முறை எப்படியும் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
இச்சூழலில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு ஆவலாக உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,"கடந்த முறை ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் ஒரு சிறந்த தொடரை விளையாடினார். மிடில் ஆர்டரில் அவர் எப்பொழுதும் சிறந்த வீரராக இருப்பார். எதிரணியாக இருந்தாலும் நீங்கள் எதைப் பெறப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. மேலும் அவர் எப்போதும் ஸ்டம்புகளுக்குப் பின்னால் பந்தை பறக்க விடுவார்.
ஆர்வமாக உள்ளேன்:
அவர் மிகவும் வேடிக்கையானவர், என்னை சிரிக்க வைக்கிறார். நான் சுப்மானுக்கு எதிராக கொஞ்சம் விளையாடி இருக்கிறேன். ஜெய்ஸ்வாலை அதிகம் பார்த்ததில்லை, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரை பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு வடிவங்களில் சில ரன்களை எடுத்த இளைஞர்கள் போல் இருக்கிறார்கள்.
எங்களுக்கு சிறிது இடைவெளி கிடைத்துள்ளது, எனவே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக நான் உற்சாகமாக உள்ளேன்.
அதில் நுழைவதில் உற்சாகமாக உள்ளது. கடந்த சில டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை, ஆனால் நாங்கள் எப்போதும் ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்கள் சிறப்பாக விளையாடியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நவம்பர் 22 முதல் ஜனவரி 7, 2025 வரை விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரூன் கிரீனைப் பொறுத்தவரை, அவர் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவரது பேட்டிங்கிற்கு மட்டுமல்ல, அவர் நான் பார்த்த சிறந்த பீல்டராகவும், நமக்குத் தேவையான ஒரு சிறந்த பந்து வீச்சாளராகவும் இருக்கலாம், எனவே நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம்"என்று கூறியுள்ளார் பேட் கம்மின்ஸ்.