மயிலாடுதுறையில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் திருத்தல திறப்பு விழா மற்றும் திருப்பலியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம்  மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலம்  அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கிரானைட் தரைதளம், ஆலய முகப்பு, நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுடன் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 

Continues below advertisement




அதனை தொடர்ந்து பணிகள் அனைத்தும் நிறைவுற்று திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்திரு.சகாயராஜ் அடிகளார் கல்வெட்டை திறந்து வைத்து, புதுப்பிக்கப்பட்ட  ஆலயத்தை புனிதம் செய்து திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆலயத்தில் அருட்தந்தையர்கள் இணைந்து நிறைவேற்றிய சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காகவும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன. 


ADMK EPS: கூட்டணி முறிந்தது முறிந்தது தான்.. பாஜக தரப்பில் எந்தவித அழுத்தமும் இல்லை - எடப்பாடி பழனிசாமி ஓபன் டாக்




இதில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பக்த சபையினர்,  பலிபீட சிறுவர்கள், பாடகற்குழுவினர், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்று வழிபாடு செய்தனர்.


Teachers Strike: நீளும் ஆசிரியர்கள் போராட்டம்: இன்று வெளியாகும் அறிவிப்பு- கோரிக்கைகளை நிறைவேற்றுமா கல்வித்துறை?