சென்னை, நுங்கம்பாக்கத்தில் 3 விதமான ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த அறிவிப்பில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, போட்டித் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 149 ரத்து செய்யப்படலாம்.


அதேபோல பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியமும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தோல்வியில் முடிந்த தொடர் பேச்சுவார்த்தைகள்


முன்னதாக ஆசிரியர் சங்கங்களுடன் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 


இந்த நிலையில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கங்களுக்கு நேற்று (அக்.3) இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டது. போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாகத் திருவல்லிக்கேணி காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் உறுதிபடத் தெரிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. 


இன்று வெளியாகும் கல்வித் துறையின் அறிவிப்பு


இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இன்று கல்வித் துறையின் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த அறிவிப்பில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, போட்டித் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 149 ரத்து செய்யப்படலாம்.


முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை


அதேபோல பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியமும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து ஆலோசித்து வருவதாகவும்  இந்த அறிவிப்புகள் அனைத்தும் இன்றே வெளியாகலாம் என்றும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக அறிய: Teachers Strike: தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்: ஆசிரியர் சங்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை தோல்வி